இந்த நிகழ்ச்சியில் அரபிக் கல்லூரி முதல்வர் மௌலானா இம்தாதுல்லாஹ் ஹழ்ரத் தலைமை தாங்கினார்கள். துணை முதல்வர் மௌலானா அஸ்ரார் அஹமது ஹழ்ரத் அனைவரையும் வரவேற்று பேசினார்கள்.
பேராசிரியர் தாஜூத்தீன் ஹழ்ரத் கிராஅத் ஓதினார்கள்.
மாவட்ட அரசு காஜி மௌலானா முஜீபுர் ரஹ்மான் ஹழ்ரத் , ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலானா அப்துல் அழீம் ஹழ்ரத் , இமாம் மௌலானா சதக்கத்துல்லாஹ் ஹழ்ரத், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் மௌலானா செய்யது அப்துல் ரஹ்மான் தங்கள் ஹழ்ரத் அவர்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காகவும் சமூக நல்லிணக்கம் ஏற்பட்டு எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் என கண்ணீர் மல்க அபூர்வ துஆ ஓதினார்கள்.
ஜாமியா பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் பி.மீராசா, செயலாளர் அல்ஹாஜ் M
S.F. ரஹ்மான், துணைத் தலைவர் அல்ஹாஜ் சாகுல் சிராஜுதீன், பொருளாளர் ஜனாப் இப்ராகிம் மூஸா, அரபிக் கல்லூரி பொருளாளர் சுலைமான், பேராசிரியர்கள் மௌலானா இஸ்மாயில் ஹழ்ரத், மௌலானா செய்யது அப்பாஸ்ஹழ்ரத், மௌலானா அப்துல் கனி ஹழ்ரத், கிரசன்ட் பள்ளி செயலாளர் முஹம்மது, உவைஸ், பொருளாளர் பீர்முகமது அசிம், ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் ஆடிட்டர் ஜூபைர்,
முஸ்லிம் சமுதாய சங்கத் தலைவர் ஏகே மைதீன் அர் ரஹ்மானியா நற்சேவை மன்ற செயலாளர் மீராசா, பொருளாளர் முகமது குட்டி, உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அரபிக் கல்லூரி தலைவர் நவரங் சகாப்தின் நன்றி கூறினார்.