About Us

 அன்னை கதீஜா மக்தப் மதரஸா

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை மூலம் தெற்கு புது தெருவில் நடைபெறும் மதரஸா.

தற்போது உலக கல்வியின் மீதுள்ள ஆர்வம் கொஞ்சம் கூடுதலாகவும்,

பள்ளி வகுப்பு நேரம் முடிந்ததற்கு பிறகும் டியூஷன், ஸ்டடி என்று அதிக நேரம் உலக கல்வியிலேயே கழிவதால் மார்க்க கல்விக்கு நேரம் ஒதுக்குவது மிக குறைவாக இருக்கிறது.

மற்றொன்று இந்தக் காலத்திற்கு ஏற்றார் போல் ஒரு முறைப்படுத்தப்பட்ட மக்தப் ( Organized Makthab) ஒரு சில இடங்களிலே தவிர பெரும்பாலான இடங்களில் இல்லை என்பது ஒரு கவலையான விஷயம்தான்!

அதனாலே நமது ஜாமிஆ பள்ளி நிர்வாகம் இது விஷயத்தில் அக்கறை எடுத்து ஒரு முறைப்படுத்தப்பட்ட மக்தப் திட்டம் உருவாக்கி சீரும் சிறப்பாக நடைபெற ஆவன செய்யுமாறு மாநகர உலமா சபை கூட்டத்தில் கேட்டுக்கொண்டது.

அதன் அடிப்படையில் மக்தப் மேம்பாட்டு திட்டம் ஒன்று உருவாக்கி நமது அன்னை கதீஜா மக்தப் மதரஸா பல சிறப்பம்சங்களுடன் வீறுநடை போடத் துவங்கியிருக்கிறது




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக