13 டிசம்பர் 2022

மாதாந்திர பெண்கள் பயான் - டிசம்பர் 2022

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
மாதாந்திர பெண்கள் பயான்
இன்ஷா அல்லாஹ் ,
நாள் :  17/12/2022 சனிக்கிழமை
நேரம் :  அசர் முதல் மஃரிப் வரை (5:15 pm to 6:15)
இடம் : அன்னை கதீஜா பெண்கள் அரபிக்கல்லூரி,
(சமுதாய நல கூடம்) தெற்குப் புதுத் தெரு

சிறப்புரை :
 மௌலவி K.Aஅப்துல் அழீம் மஸ்லஹி ஹஜ்ரத் அவர்கள்
(தலைமை இமாம் ஜாமிஆ மஸ்ஜித் & முதல்வர் அன்னை கதீஜா மகளிர் அரபிக்கல்லூரி)


தலைப்பு:
 " பெண்களின் சிறப்பும் பொறுப்பும் "

ஜமாத்தார்கள் அனைவரும் தங்கள் வீட்டுப் பெண்களை பயானுக்கு அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
     இப்படிக்கு
 மாநகர ஜமாஅத்துல் உலமா சபை & ஜாமிஆ பள்ளிவாசல் மஹல்லா
 தூத்துக்குடி.

06 டிசம்பர் 2022

மக்தப் மேம்பாட்டுத் திட்டம் - அன்னை கதீஜா மக்தப் - தூத்துக்குடி

 மக்தபை மேம்படுத்த காலத்தின் கட்டாயம் கருதி சில ஒழுங்குமுறைத் திட்டங்களை நம் மதரஸா முன் வைக்கிறது.

இது பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்பொழுது நிறைய மாணவர்கள் மாணவிகள் தாய்மார்கள் என நம் மதரஸாவில்கூட்டம் அலைமோதுகிறது. அல்லாஹ்வின் அருளால் கியாமத் வரை இன்னும் சீரும் சிறப்புடனும் செயல்பட உங்கள் அனைவரின் துஆவுடன் இதை சமர்ப்பிக்கிறோம்.



பெற்றோர் ஆசிரியர் கூட்டம் - மக்தப் மேம்பாட்டுத் திட்டம்


 அஸ்ஸலாமு அலைக்கும்..

26.11.2022 சனி மாலை 5 மணி அளவில் நமது அன்னை கதீ
ஜா மதரஸா
வில்
பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது.

அது சமயம் நிஸ்வான் & மக்தப் மதரஸாவின் முதல்வர் மௌலானா அல்ஹாபிழ்  K.A.  அப்துல் அழீம் மஸ்லஹி  ஹழ்ரத்  அவர்கள் தலைமை தாங்கி மதரஸாவின் முக்கியத்துவம் குறித்து தலைமையுரை நிகழ்த்தினார்கள்.

ஆரம்பமாக, மதரஸாவின் பேராசிரியை ஆலிமா ஆயிஷா சித்தீக்கா கதீஜிய்யா அவர்கள் திருமறை ஓதி துவக்கி வைக்க, 

மதரஸாவின் பேராசிரியை ஆலிமா பாத்திமுத்து ஜஹ்ரா கதீஜிய்யா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி துவக்கவுரையும் நிகழ்த்தினார்கள்.

மௌலவி அல்ஹாபிழ்  A.ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஹழ்ரத்  Projector  மூலம் விளக்கப்பட காட்சிகள் காண்பித்து Organized Makthab சீராக சிறப்பாக செயல்படும் விதம் குறித்து தெளிவு படுத்தினார்கள். 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்னை கதீஜா நிஸ்வான் மற்றும் மக்தப் ஆலிமாக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

பெற்றோர்களும் பிள்ளைகளும் கூடுதலான அளவில் ஆர்வத்தோடு கலந்து கொண்டது அளவிலா சந்தோஷம்.

அல்ஹம்துலில்லாஹ் !