26.11.2022 சனி மாலை 5 மணி அளவில் நமது அன்னை கதீ
ஜா மதரஸாவில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது.
அது சமயம் நிஸ்வான் & மக்தப் மதரஸாவின் முதல்வர் மௌலானா அல்ஹாபிழ் K.A. அப்துல் அழீம் மஸ்லஹி ஹழ்ரத் அவர்கள் தலைமை தாங்கி மதரஸாவின் முக்கியத்துவம் குறித்து தலைமையுரை நிகழ்த்தினார்கள்.
ஆரம்பமாக, மதரஸாவின் பேராசிரியை ஆலிமா ஆயிஷா சித்தீக்கா கதீஜிய்யா அவர்கள் திருமறை ஓதி துவக்கி வைக்க,
மதரஸாவின் பேராசிரியை ஆலிமா பாத்திமுத்து ஜஹ்ரா கதீஜிய்யா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி துவக்கவுரையும் நிகழ்த்தினார்கள்.
மௌலவி அல்ஹாபிழ் A.ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஹழ்ரத் Projector மூலம் விளக்கப்பட காட்சிகள் காண்பித்து Organized Makthab சீராக சிறப்பாக செயல்படும் விதம் குறித்து தெளிவு படுத்தினார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்னை கதீஜா நிஸ்வான் மற்றும் மக்தப் ஆலிமாக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
பெற்றோர்களும் பிள்ளைகளும் கூடுதலான அளவில் ஆர்வத்தோடு கலந்து கொண்டது அளவிலா சந்தோஷம்.
அல்ஹம்துலில்லாஹ் !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக