பாரம்பரியமிக்க தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள நூஹ் மகான் அப்பா வலியுல்லா கந்தூரி விழா 27.01.2025 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் அல்ஹாஜ் பி மீராசா மரைக்காயர் அவர்கள் தலைமையில் நிர்வாக குழு செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடந்த இவ்விழாவில் உலக நன்மைக்காக துஆ ஓதி தப்ரூக் எனும் நேர்ச்சை வழங்கப்பட்டது.