தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற ஜமாத்தார்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
நிகழும் சங்கையான ஹிஜ்ரி 1446 ஆம் ஆண்டு துல்ஹஜ் பிறை 10 (7.6.2025) சனிக்கிழமை சரியாக காலை 8.00 மணிக்கு பாளையங்கோட்டை ரோடு ஈத்கா தோட்டத்தில் இன்ஷா அல்லாஹ் ஈதுப் பெருநாள் தொழுகை நடைபெறும்.
பெருநாள் தொழுகைக்கு வரக்கூடிய ஜமாத்தார்கள் ஈத்கா தோட்டத்தின் வடக்கு பகுதி ஜி.ஹெச் வாசல் வழியாகவும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வரக்கூடியவர்கள் ஈத்கா தோட்ட மேற்குப் பகுதி கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முன் வாசல் வழியாகவும் வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பெருநாள் அன்று காலை மழை இருப்பின் பெருநாள் தொழுகை அந்தந்த மஹல்லா பள்ளிவாசல்களில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பு:
- தக்பீர் உடைய நாட்கள் துல்ஹஜ் பிறை 9, (06.06.2025) வெள்ளிக்கிழமை சுபஹில் இருந்து பிறை 13, 10.6.2025 செவ்வாய்க்கிழமை அசர் வரை
- பெண்களுக்கு வழக்கம்போல் தெற்கு புதுத் தெருவில் உள்ள ஜாமியா சமுதாய நலக்கூடத்தில் (அன்னை கதீஜா பெண்கள் அரபிக்கல்லூரி) காலை 9 மணிக்கு இன்ஷா அல்லாஹ் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெறும்.
- துல்ஹஜ் பிறை 9, (06.06.2025) வெள்ளிக்கிழமை அரஃபா தினத்தில் நோன்பு பிடிப்பது சுன்னத் ஆகும்.
- வழமைப் போல் தொழுகைக்கு தார்பாய் விரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜமாத்தார்கள் தங்கள் இல்லங்களில் உளூ செய்து தங்களது விரிப்புகளை தொழுகைக்கு கொண்டு வருவது ஏற்றமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக