பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக்கல்லூரி இனிதே ஆரம்பம்...
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் நம்முடைய அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக்கல்லூரி புனித ரமலான் மாதத்திற்குபின் வரக்கூடிய ஷவ்வால் மாதம் பிறை 17 (06.04.2026) திங்கள்கிழமை முதல் மிகச்சிறப்பான முறையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.
அல்ஹம்துலில்லாஹ்.
நம்முடைய ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபையின் மேற்பார்வையின் கீழ் மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக்கல்லூரி சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு உட்பட்டு,
நமது ஜாமியா பள்ளிவாசலுடைய தலைமை இமாம்
மெளலவி ஹாபிழ் அல்ஹாஜ். KA.அப்துல் அழீம் மஸ்லஹி, பாஜில் தேவ்பந்தி M.A, ஹஜ்ரத் அவர்கள் முதல்வராகவும், இன்னும் பல திறமையான பெண் ஆலிமாக்களை ஆசிரியர்களாக கொண்டும் செயல்பட்டுவருகிறது.
மெளலவி ஹாபிழ் அல்ஹாஜ். KA.அப்துல் அழீம் மஸ்லஹி, பாஜில் தேவ்பந்தி M.A, ஹஜ்ரத் அவர்கள் முதல்வராகவும், இன்னும் பல திறமையான பெண் ஆலிமாக்களை ஆசிரியர்களாக கொண்டும் செயல்பட்டுவருகிறது.
இன்னும், நமது மதரஸா மூன்றாண்டு பாடத்திட்டத்தின் கீழ் அரபி இலக்கணம், ஃபிக்ஸ், தப்ஸீர், ஹதீஸ், போன்ற அனைத்து பாடங்களுமே அரபி கிதாபுகளின் மூலமாகவே நடத்தப்பட்டு மிகச்சிறந்த பல ஆலிமாக்களை கடந்த பத்து வருடங்களாக உருவாக்கி அவர்கள் எல்லாம் சமூகத்தில் பலஇடங்களில் சேவையாற்றி மிகச்சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இதுதவிர அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் நமது மதரஸாவில் பிரத்தியேகமாக ஒரு ஹாஃபிழ், ஆலிம் பேராசிரியரை கொண்டு ஹாஃபிழா குர்ஆன் மனனப்பிரிவு பாடமும் ஆரம்பிக்கப்பட்டு அதிகமான பெண்கள் அந்த ஹாஃபிழா வகுப்பிலும் சேர்ந்து மிகச் சிறப்பான முறையில் குர்ஆனை மனனம் செய்து வருகிறார்கள். கடந்த வருடம் ஹாஃபிழா பட்டமும் பெற்று இருக்கிறார்கள் என்பதையெல்லாம் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அல்ஹம்துலில்லாஹ்.
எனவே காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தினமும் நடைபெறும் நமது மதரஸாவில் தங்களது இல்ல பெண்களையும் சேர்த்து உங்களுடைய இல்லத்திலும் சிறந்த ஆலிமா, ஹாஃபிழா அமைவதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மிக்கஅன்போடு கேட்டுக்கொள்கிறோம்,
தற்போது (30.03.2026) திங்கள்கிழமை முதல் தினமும் அட்மிஷன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது
அட்மிஷன் நேரம் காலை 10.00 மணிமுதல் 12.30 மணி வரை
அட்மிஷன் நேரம் காலை 10.00 மணிமுதல் 12.30 மணி வரை
தொடர்புக்கு :
மௌலவி.ஹாபிழ்,அல்ஹாஜ். K.A. அப்துல் அழீம் மஸ்லஹி, பாஜில் தேவ்பந்தி M.A. : 9952294536
முதல்வர், அன்னை கதீஜா (ரலி) மகளிர் & மக்தப் அரபிக்கல்லூரி,
ஷிஃபானா ஆலிமா நூரிய்யா : 9600796205
தலைமை பேராசிரியை : அன்னை கதீஜா (ரலி) மகளிர் அரபிக்கல்லூரி.
குறிப்பு:
இன்ஷா அல்லாஹ் 06.04.2026 திங்கள்கிழமை முதல் மாலை 4.30 முதல் 6.15 மணிவரை 200 ற்கும் மேற்பட்ட
சிறுவர், சிறுமிகள் மற்றும் இல்லத்துப் பெண்கள் பயின்று வரும் நமது அன்னை கதீஜா (ரலி) “ மக்தப் மதரஸாவும்'' அன்றைய தினம் சிறப்பாக துவங்கி தினமும் நடைபெறும்.
எனவே பெற்றோர்கள் தங்களுடைய ஆண் மற்றும் பெண் குழந்தைகளை மக்தப் மதரஸாவிற்கு அனுப்பி பயன் பெருமாறு அன்போடு கேட்டுகொள்கிறோம்.
இப்படிக்கு
நிர்வாக அதிகாரி, ஜாமிஆ பள்ளிவாசல்
நிர்வாக அதிகாரி, ஜாமிஆ பள்ளிவாசல்
தூத்துக்குடி
28.03.2026
28.03.2026