பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை மிக சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி சுற்றுவட்டார சுமார் 20 மஹல்லாக்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஜமாத்தினர்கள் பெருநாள் தொழுகையில் சிறப்பாக கலந்து கொண்டனர்.
சில ஜமாத்துகளிலிருந்து தக்பீர் முழங்கிக் கொண்டே சாலைகளில் நடந்து வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி மௌலவி அல்ஹாபிழ் சா.முஜிபுர் ரஹ்மான் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தீ அவர்கள் தலைமையில், தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாபிழ் K.A.அப்துல் அழீம் மஸ்லஹி, இமாம் மௌலவி அல்ஹாபிழ் அ.ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஆகியோர் குத்பா மற்றும் தொழுகையை சிறப்பாக நடத்தினர்.
உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு
மக்கள் சலாம் கொடுத்து ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி பாசத்தை பகிர்ந்து கொண்டனர்.
தூத்துக்குடி ஜாமியா பள்ளி நிர்வாக சபையின் மேலாளர் மற்றும் அலுவலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திறன் பட செய்திருந்தனர்.
அல்ஹம்து லில்லாஹ்.

