05 அக்டோபர் 2022

ஐந்தே மாதங்களில் திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த சாதனை மாணவி

ஐந்தே மாதங்களில் திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த
 💫 சாதனை மாணவி💫

இராமநாதபுரம் மாவட்டம் 
சிறுகம்பையூர் கிராமத்தைச் சார்ந்த 

N.M.S.நெய்னா முஹம்மது அவர்களின் மகள்
N.ஆயிஷா சித்திக்கா
(வயது 18)

இவர் தூத்துக்குடி மாவட்டம் 
பேட்மாநகரம் நூருல் ஈமான் இஸ்லாமிய மகளிர் கல்லூரியில்
 ஹிஃப்ழு பிரிவில் ஓதி வருகிறார்...

கடந்த 30/09/2022 வெள்ளிக்கிழமை
 உஸ்தாத்மார்கள் மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு முன்னிலையில்
திருக்குர்ஆனை கத்தம் செய்தார்..

விடுமுறை நாட்கள் பாடம் இல்லாத நாட்கள் இவற்றை கழித்து
மாணவி N.ஆயிஷா சித்தீகா
ஐந்து மாதங்களில் திருக் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து சாதனை படைத்துள்ளார்..

கொடுத்த பாடம் விபரம் :
💫 ஒரு மாதத்திற்கு 6 ஜுஸ்வுக்கள்
💫 ஐந்து மாதத்திற்கு 30 ஜுஸ்வுக்கள்

தூக்கத்தை குறைத்துக் கொண்டு உணவை குறைத்துக் கொண்டு 
புனித குர்ஆனை மனனம் செய்வதில் ஆர்வம் காட்டி இருக்கின்றார் என்று ஆசிரியர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.

(பொதுவாக திருக்குர்ஆன் முழுமையாக மனனம் செய்வதற்கு மாணவர்கள் மூன்று ஆண்டுகள் அல்லது நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொள்வர்...)

குறிப்பு:-
மாணவி N.ஆயிஷா சித்தீகா
எட்டாம் வகுப்பு வரை English medium படித்தார் 
படிக்கும் போதே பள்ளிக்கூடத்தில் முதல் மாணவி...
சிறுகம்பையூர் மக்தப் மதரஸாவில் குர்ஆன் ஓதினார். குர்ஆன் ஓதுவதிலும்
மக்தப்  போட்டிகளில் பங்கேற்று பரிசு பெறுவதிலும் மதரஸாவில் முதல் மாணவி.

அதன் பின்னர் 
தொண்டி கமாலியா மகளிர் அரபுக் கல்லூரியில் ஓதுவதும் படிப்பதுமாக முபல்லிகா பிரிவில் சேர்ந்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு முபல்லிகா (ஆலிமா) வகுப்பை முடித்து ஸனது பெற்றார்..
School படிப்பில் 12 ஆம் வகுப்பு வரை படித்தார்...
தொண்டி கமாலியா மதரஸாவிலும்  முதல் மாணவி....

தற்போது தூத்துக்குடி மாவட்டம்
 பேட்மாநகரத்தில் ஐந்து மாதங்களில் குர்ஆன் முழுவதும் மனனம் செய்து
மதரஸா வரலாற்றிலேயே இவர் தான் முதல் மாணவி
 என்று ஆசிரியர்களால் பாராட்டப்பட்டு சாதனை படைத்துள்ளார்...

இராமநாதபுரம் மாவட்ட அளவிலும் ஐந்து மாதத்தில் திருக் குர்ஆன் மனனம் செய்த முதல் மாணவி N.ஆயிஷா சித்தீகா என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஷா அல்லாஹ்... எதிர் வரும் பட்டமளிப்பு விழாவில் மாணவி
 N.ஆயிஷா சித்தீக்கா  ஹாஃபிழா ஸனது பெற உள்ளார்.

எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா
இம்மாணவி மற்றும் இவரை ஈன்றெடுத்த தாய் தந்தை மற்றும் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் அனைவருக்கும்
சிறந்த நற்கூலிகளை ஈருலகிலும் வழங்குவானாக.

இவர்களின் கல்வியை கொண்டு உம்மத் பலனடைய கிருபை செய்வானாக... 
அனைத்து நல் அமல்களையும்  கபூல் செய்வானாக....

இது போன்று ஒவ்வொரு ஊர்களிலும் ஆண் ஹாஃபிழ்கள்
மற்றும் பெண் ஹாஃபிழாக்கள் உருவாவதற்கு
எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா நல்லுதவி செய்வானாக கிருபை செய்வானாக ஆமீன் ஆமீன்

தகவல்:-
மௌலவி U.செய்யது அலி பாதுஷா சிராஜி
இமாம்; சிறுகம்பையூர்,
துணைச் செயலாளர்;
திருவாடானை & R.S.மங்களம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை
04/10/2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக