02 ஆகஸ்ட் 2022

பெண் ஜனாஸா குளிப்பாட்டு முறை பயிலரங்கம்

 




அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் 
 02/08/2022 அன்று தூத்துக்குடி மதர் பைரோஸ் டிரஸ்ட் மற்றும் மாநகர ஜமாத்துல் உலமா சபை இணைந்து நடத்திய பெண்கள் ஜனாஸா குளிப்பாட்டும் முறை  பயிலரங்கம் மிகச் சிறப்பான முறையில் நடந்தேறியது. அதில் நம்முடைய மாநகரத்திலிருந்து 185 பெண்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

துவக்க உரை மற்றும் வரவேற்புரையை ஜாமியா பள்ளிவாசலுடைய தலைமை இமாம் அப்துல் அழீம் ஹஜரத் அவர்கள் நிகழ்த்த 

ஜனாஸா குளிப்பாட்டு முறை பற்றி பி & டி காலனி  மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபுக் கல்லூரியின் பேராசிரியர் அப்துல் ரஹ்மான் ஹஜரத் அவர்கள் உரையாற்ற

 பெண்கள் ஹெல்த் கேர் சம்பந்தமாக மதர் பைரோஸ் ட்ரெஸ்ட்டின் மூத்த நிர்வாகி டாக்டர் நசீர் அவர்கள் உரை மற்றும் நன்றியுரை நிகழ்த்தினார்கள்

அன்னை கதீஜா மகளிர் அரபிக் கல்லூரியின்  பேராசிரியைகள் உஸ்தாதா ஷிபானா, உஸ்தாதா ஸைபுன்னிஸா ஆகியோர்கள் ஜனாஸா குளிப்பாட்டும் முறை பற்றி செயல்முறை விளக்கம் தர,

 மாநகர ஜமாதுல் உலமா சபையின் செயலாளர் சம்சு ஹஜரத் மற்றும் ஜாமியா பள்ளிவாசல் இமாம் சதகத்துல்லாஹ் ஹஜரத் மற்றும் ரஹ்மத் நகர் இமாம் நாஃபி ஹஜரத் மற்றும் பல இமாம்கள் கலந்து கொண்டு நிறைவாக இமாம் அவர்களுடைய துஆவோடு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்

இவண்
மாநகர ஜமாஅத்துல் உலமா சபை &
மதர் ஃபைவ் ரோஸ் ட்ரஸ்ட்
தூத்துக்குடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக